திருமணஞ்சேரி கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

திருமணஞ்சேரி கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
திருமணஞ்சேரி கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
Published on

குத்தாலம் அருகே திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று 2 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா நடந்தது. திருமணத்தை மயிலாடுதுறை அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியசீலன் ஆகியோர் நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர். புதுமண தம்பதிகளுக்கு அறநிலையத்துறை சார்பில் திருமாங்கல்யம் மற்றும் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள உடைகள், முகூர்த்த மாலைகள், கட்டில், பீரோ உள்ளிட்ட 30 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை உதவி ஆணையர் முத்துராமன், குத்தாலம் ஆய்வர் ஹரிசங்கரன், குத்தாலம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், திருமணஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com