பொதுமக்களுக்கு முகக்கவசம்

பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு முகக்கவசம்
Published on

நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிவசேனா கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில முதன்மை செயலாளர் சுந்தரவடிவேலன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், 'அதிகரித்து வரும் மர்ம காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவசேனா கட்சி சார்பில் முகக்கவசம் வழங்கி உள்ளோம். ஆன்மிக தலங்களில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் செல்வகுமார் மற்றும் சிவசேனா கட்சியினர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com