சிறுவர், சிறுமிகளுக்கான இலவச ஓவிய பயிற்சி முகாம்

தூத்துக்குடியில் சிறுவர், சிறுமிகளுக்கான இலவச ஓவிய பயிற்சி முகாம் நடைபெற்றது.
சிறுவர், சிறுமிகளுக்கான இலவச ஓவிய பயிற்சி முகாம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் சிறுவர், சிறுமிகளுக்கான இலவச ஓவிய பயிற்சி முகாம் நடந்தது. முகாமை தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர் பாலன் தொடங்கி வைத்தார். மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் சிலுவை அந்தோணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சி பெற்ற சிறுவர், சிறுமிகளை பாராட்டினார். பயிற்சியில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளுக்கு வி.வி.டி நினைவு ஆரம்பப் பள்ளி ஆசியைகள் நளினி மற்றும் ஆனந்தசெல்வி ஆகியோ உலக சுற்றுப்புற சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை வழங்கினர்.

முகாமில், தாளமுத்துநகர், ராஜபாளையம், சிலுவைப்பட்டி, ஆரோக்கியபுரம் ஆகிய கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com