ஸ்மார்ட் வகுப்பறைக்கு இலவசமாக இருக்கைகள் வழங்கல்

பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு இலவசமாக இருக்கைகள் வழங்கப்பட்டது
ஸ்மார்ட் வகுப்பறைக்கு இலவசமாக இருக்கைகள் வழங்கல்
Published on

இட்டமொழி:

பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஸ்மார்ட் வகுப்பறையில் மாணவ-மாணவிகளுக்கு தேவையான ரூ.1 லட்சம் மதிப்பிலா மேஜை,இருக்கைகளை நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் தனது சொந்த செலவில் வாங்கி இலவசமாக தலைமை ஆசிரியர் பாபுசெல்வனிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் செல்லத்துரை, மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் என்.ஞானராஜ், இளைஞரணி நிர்வாகி சேர்மபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com