மாவட்ட வனப்பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

மாவட்ட வனப்பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
மாவட்ட வனப்பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
Published on

தமிழ்நாடு வனத்துறையின் பெரம்பலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர் வனச்சரகம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் தேக்கு, மகாகனி, வேம்பு, புங்கன், நாவல், புளி, கொடுக்காபுளி, விளா, பூவரசு, நீர்மருது, சவுக்கு, கொய்யா, செம்மரம், எலுமிச்சை, மகிழம், நெல்லி, இலுப்பை, பாதாம், கொன்றை, பலா, மாதுளை உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்படும். நீர்ப்பாசன வசதி உள்ள விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். இலவச மரக்கன்றுகள் தேவைப்படும் பெரம்பலூர் தாலுகாவுக்குட்பட்ட விவசாயிகள் 9486965689, ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் 9597837928, வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் 8610773427, குன்னம் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் 9962467873 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம், என்று பெரம்பலூர் வனச்சரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com