

சென்னை,
ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு 'அம்மா ஐஏஎஸ் அகாடமி' என்ற பயிற்சி மையத்தின் மூலம் சென்னை, கோவையில் இலவசப் பயிற்சி அளிக்க உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
''ஐஏஎஸ் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான இலவச சிறப்புப் பயிற்சியை அளிக்க 'அம்மா ஐஏஎஸ் அகாடமி' ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய தேர்வாணையம் குடிமைப் பணிகளுக்காக நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ/ மாணவியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொருட்டு 'அம்மா ஐஏஎஸ் அகாடமி' பயிற்சி மையத்தின் சார்பில் சென்னை மற்றும் கோவையில் மூத்த குடிமைப் பணி அதிகாரிகள் ஆளுமைத் தேர்வும், ஒரு நாள் சிறப்பு வகுப்பும் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.