மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்

மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன
மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்
Published on

திருக்கடையூர்

திருக்கடையூர் அருகே மாத்தூர் ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 185 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களை கவரும் வகையில் 1-ம் மற்றும் 2, 3-ம் வகுப்பு அறைகள் ரெயில் பெட்டிகள் போன்று வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது. இந்த வகுப்பறைகளின் திறப்பு மற்றும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மங்கை முன்னிலை வகித்தார். இதில், பூம்புகார் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார். இதில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், பொதுக்குழு உறுப்பினர் அமுர்த விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com