அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சீருடை

ராமேசுவரத்தில் தளபதி விஜய் மக்கள் மன்றம் சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.
அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சீருடை
Published on

ராமேசுவரம், 

ராமேசுவரம் ராமதீர்த்தம் பகுதியில் செயல்பட்டு வரும் பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநில தலைவர் புஸ்ஸிஆனந்த் உத்தரவுப்படி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஜெயபாலா தலைமையில் எஸ்.பி.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ஆதரவற்ற மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தீவு விஜய் மக்கள் இயக்க நகர் தலைவர் கோவிந்தராஜ், நகர் பொருளாளர் கோபிகிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் ராஜு மற்றும் நிர்வாகிகள் இப்ராஹிம், விக்கி, கண்ணன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை சிவரஞ்சனி மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் விஜய் மக்கள் மன்றம் சார்பில் ராமேசுவரம் சுனாமி காலனியில் மீனவர் ஒருவரின் மகளுக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கினார். .தொடர்ந்து சிவகாமி நகரில் நடந்த விழாவில் காமராஜரின் திரு உருவப்படத்திற்கு தளபதி விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com