

தர்மபுரி:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தி.மு.க. வர்த்தகர் அணி சார்பில் தர்மபுரி முதியோர் இல்லத்தில் நடந்தது. மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பி.தர்மசெல்வன் தலைமை தாங்கி கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு இலவச வேட்டி - சேலைகளை வழங்கினார். விழாவையொட்டி அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் வைத்திலிங்கம், சோலைமணி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் குமார், பென்னாகரம் ஒன்றிய துனை செயலாளர் சின்னசாமி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பூம்புகார் சின்னசாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் தென்னரசு, முன்னாள் ஒன்றிய துனை தலைவர் அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட தொண்டர் அணி துனை அமைப்பாளர் கோவிந்தராஜன், நிர்வாகிகள் செந்தில்குமார், மூர்த்தி, தமிழரசன், சென்றாயன், வெங்கடாசலம், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.