

பல்லடம்,
தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி வருகிறது. அந்தவகையில் பல்லடம் பகுதிக்கு வந்த இலவச வேட்டி சேலைகள், தாலுக்கா அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.
ரேசன் கடைகளுக்கு அனுப்பியது போக மீதியானவற்றை தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய வேட்டி,சோலைகளை முறையாக பராமரிக்காததால் எலி கடித்து மூட்டைகள் பிரிந்தும் வீணாகி வருகிறது.
இவற்றை முறையாக பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.