234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனு: காங்கிரஸ் அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வினியோகம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வினியோகம் செய்வதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக வெளியிடப்படிருந்த அறிக்கையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடம் இருந்து 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தை இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திலோ அல்லது மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ளலாம்.

நேரடியாக வந்து விருப்ப மனு படிவத்தை பெற இயலாதவர்கள் https://drive.google.com/drive/folders/1G7I1MOz3nNkgXGohJKlneblXZxDBaGVh?usp=sharing என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் சட்டமன்ற தொகுதியை குறிப்பிட்டு விருப்ப மனு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விவரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் இறுதி நாளான 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனு இன்று முதல் (10.12.2025) வருகிற 15.12.2025 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனு படிவங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலே அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலோ சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் தற்போது டிசம்பர் 31, 2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com