மக்கள் கூடும் இடங்களில் இலவச வைபை வசதி: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

மக்களுக்கு இலவச வைபை வசதி ஏற்படுத்துவது குறித்த ஆலோசணைக் கூட்டம் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் கூடும் இடங்களில் இலவச வைபை வசதி: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்களுக்கு இலவச வைஃபை (WIFI) வசதி ஏற்படுத்துவது குறித்து இணைய சேவை வழங்குநர்களுடனான (Internet Service Providers) ஆலோசணைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்களுக்கு இலவச வைபை (WIFI) வசதி ஏற்படுத்துவது குறித்து இணைய சேவை வழங்குநர்களுடனான (Internet Service Providers) ஆலோசணைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் இன்று (07.08.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன் மற்றும் ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), ஹாத்வே (Hathway) மற்றும் ஏசிடி (ACT) ஆகிய இணைய சேவை வழங்குநர்கள், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இலவச வைபை (WIFI)

தமிழ்நாடு முதல்-அமைச்சர், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகள், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகளிலும், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைபை (WIFI) வசதியினை ஏற்படுத்திட இதற்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களான ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), ஹாத்வே (Hathway) மற்றும் ஏசிடி (ACT) ஆகிய இணைய சேவை வழங்குநர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com