சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் - எடப்பாடி பழனிசாமி மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் - எடப்பாடி பழனிசாமி மரியாதை
Published on

சென்னை,

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தையொட்டி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாய் விளங்கி ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்புரிந்த சுதந்திர போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் 251-ஆவது நினைவு தினத்தையொட்டி இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com