கூடலூர்- மைசூர் சாலையில் பழுதாகி நின்ற சரக்கு லாரி - போக்குவரத்து பாதிப்பு

கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி பழுதடைந்து நின்றதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்- மைசூர் சாலையில் பழுதாகி நின்ற சரக்கு லாரி - போக்குவரத்து பாதிப்பு
Published on

கூடலூர்,

தமிழகம்- கர்நாடகா, கேரளா மாநிலங்கள் இணையும் கூடலூர் வழியாக ஏராளமான சரக்கு லாரிகள், தனியார் வாகனங்கள் இயக்கப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் அதிக அளவு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து வெளி மாநிலத்துக்கு செல்வதற்காக சரக்கு லாரி ஒன்று புறப்பட்டது.

அப்போது தொரப்பள்ளி அருகே லாரியின் செயல்பாடு குறித்து டிரைவர் பரிசோதித்தார். தொடர்ந்து லாரியை திருப்ப முயற்சி செய்தார். அப்போது கூடலூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்றவாறு லாரி திடீரென பழுதடைந்தது.

இதைத்தொடர்ந்து லாரியை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இருப்பினும் பழுதை சரி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக பொதுமக்கள், வாகன டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதனிடையே அப்பகுதிக்கு போலீசார் வராததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இணைந்து பழுதான லாரியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் 1 மணி நேர முயற்சிக்குப் பிறகு பழுது சரி செய்யப்பட்டது. அதன் பின்னர் பகல் 2 மணிக்கு போக்குவரத்து சீரானது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com