சோளிங்கர் அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து

விபத்தால் காட்பாடி, சென்னை இருமார்க்கத்திலும் ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு இல்லை.
சோளிங்கர் அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து
Published on

ராணிப்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து 60 காலிப்பெட்டிகளுடன் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த மகேந்திரவாடி ரெயில் நிலையம் அருகே சென்றபோது கடைசி பெட்டி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.

இதையடுத்து இன்ஜின் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு, மேற்கொண்டு ரெயிலை இயக்காமல் உடனடியாக நிறுத்தினார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார், சரக்கு ரெயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தால் காட்பாடி, சென்னை இருமார்க்கத்திலும் ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு இல்லை. சரக்கு ரெயில் தடம்புரண்டது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com