திருவாரூர் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

சரக்கு ரெயிலின் எஞ்சினை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
திருவாரூர்
புதிய ரெயில் பாதை பணிக்காக திருவாரூர் ரெயில் நிலையத்திலிருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு 12 பெட்டிகளுடன் சரக்கு ரெயில் ஒன்று காரைக்கால் நோக்கி ரெயில் புறப்பட்டது. ரெயில் சென்ற சிறிது நேரத்தில், எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி ஜல்லிக் கற்கள் இடையே சிறிது தூரம் ஓடி ரெயில் நின்றது.
உடனடியாக இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே அதிகாரிகள், தடம் புரண்ட சரக்கு ரெயிலின் எஞ்சினை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக ரெயில் பெட்டிகளை மாற்று எஞ்சின் மூலமாக காரைக்காலுக்கு எடுத்துச் செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






