சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு லாரி: டிரைவர் உட்பட 4 பேர் படுகாயம்

தேன்கனிக்கோட்டை அருகே சாலையோர பள்ளத்தில் சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு லாரி: டிரைவர் உட்பட 4 பேர் படுகாயம்
Published on

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே திருமுருக்கு என்ற இடத்தில் முன்னால் சென்ற கார் மீது மோதுவதை தவிர்க, பின்னால் சென்ற சரக்கு லாரி பிரேக் போட்ட போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் சரக்கு லாரி டிரைவர் மற்றும் அவரோடு லாரியில் பயணம் செய்த 4 பேர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்தவர்கள் அனைவரையும் அப்பகுதியினர் மீட்கப்பட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அறிந்த அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சரக்கு லாரியில் கர்நாடக மாநிலத்திலிருந்து வேலி கற்கள் ஏற்றப்பட்டு தமிழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com