விபத்தில் உயிரிழந்த நண்பர்: துக்கத்தில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு

நண்பர் விபத்தில் உயிரிழந்ததால் வாலிபர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் வடக்கு தெரு, நல்லம்மாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் கவுசிக் (22 வயது). இவர் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள அவரது உறவினரின் டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் ஜனனி (19 வயது) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜனனி திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கவுசிக்கின் நண்பர் தமிழ்மணி என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனது சரியில்லை என்று மனைவியிடம் கவுசிக் கூறி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் அவர் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ஜனனி கல்லூரிக்கு சென்ற நிலையில், கவுசிக் வீட்டில் உள்ள சட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கவுசிக்கை அவரது உறவினர்கள் உதவியுடன் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே கவுசிக் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஜனனி வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com