2024-ம் ஆண்டு முதல் மதுரையில் இருந்து ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை

2024-ம் ஆண்டு முதல் மதுரையில் இருந்து ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹஜ் அசோசியேஷன் தலைவர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அகில இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 164 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இதில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 421 பேர் இந்திய ஹஜ் கமிட்டி சார்பிலும், 34,635 பேர் தனியார் ஹஜ் நிறுவனங்கள் சார்பிலும் ஹஜ் பயணம் பூர்த்தி செய்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 ஆயிரத்து 954 பேர் புனித ஹஜ் பயணத்தை நிறைவு பெற்று தமிழகம் திரும்ப உள்ளார்கள். மேலும் ஹஜ் பயணம் முடித்து வருகின்ற திங்கட்கிழமை முதல் விமானம் மூலம் டெல்லி வருகின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் விமானம் வருகிற 15-ந்தேதி வருகிறது. இந்த ஆண்டு நமது நாட்டைச் சேர்ந்த 20 ஹாஜிகள் மரணம் அடைந்துள்ளனர். இதில் ஒரே ஒரு பெண் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார். வருகின்ற 2024 ஹஜ் பயணத்துக்கு மதுரையில் இருந்தும் சில விமானங்கள் இயக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. எனவே மதுரையை சுற்றியுள்ள மக்களுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான சிறப்பான வசதியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com