பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
Published on

பவானிசாகர்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீரை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா திறந்து வைத்தார். ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.

தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக இரட்டை படை மதகுகளுக்கு முதல் போகத்துக்கு ஆகஸ்டு 15-ந் தேதி முதல் டிசம்பர் 13-ந் தேதி வரை 120 நாட்கள் தேவைக்கேற்ப தண்ணீர் திறக்குமாறு அரசு ஆணையிட்டு இருந்தது.

அதன்படி நேற்று மாலை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கலந்து கெண்டு பொத்தானை அழுத்தி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்தார்.

1,03,500 ஏக்கர் பாசனம்

முதல் கட்டமாக அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது வாய்க்காலில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்தப் பணி நிறைவடைந்ததும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும். பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தற்போது திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி வரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com