ஜனவரி 1-ந்தேதி முதல் பொதிகை, செந்தூர், முத்துநகர் உள்பட 22 ரெயில்களின் வேகம் அதிகரிப்பு

22 ரெயில்களின் வேகம் ஜனவரி 1-ந்தேதி முதல் அதிகரிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜனவரி 1-ந் தேதி முதல் கீழ்க்கண்ட மெயில், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் பயண நேரம் 5 நிமிடம் முதல் 85 நிமிடம் வரை மிச்சப்படும்.
அதன்படி, சென்னை சென்டிரல் - நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20 நிமிடம் குறையும்), சென்னை சென்டிரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் (15 நிமிடம் குறையும்), சென்னை சென்டிரல் - டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் (5 நிமிடம் குறையும்), சென்னை சென்டிரல் - போடிநாயக்கனூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (5 நிமிடம் குறையும்), நிஜாமுதீன் - சென்னை சென்டிரல் ராஜதானி எக்ஸ்பிரஸ் (10 நிமிடம் குறையும்), நிஜாமுதீன் - சென்னை சென்டிரல் துரந்தோ எக்ஸ்பிரஸ் (10 நிமிடம் குறையும்),
கோவை - சென்னை சென்டிரல் இன்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (5 நிமிடம் குறையும்), சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (20 நிமிடம் குறையும்), சென்னை எழும்பூர் - ராமேசுவரம் சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (10 நிமிடம் குறையும்), சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (10 நிமிடம் குறையும்), சென்னை எழும்பூர் - மங்களூரு சென்டிரல் எக்ஸ்பிரஸ் (25 நிமிடம் குறையும்), தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் (30 நிமிடம் குறையும்),
ராமேசுவரம் - சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (10 நிமிடம் குறையும்), திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (10 நிமிடம் குறையும்), தாம்பரம் - மதுரை மகால் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (10 நிமிடம் குறையும்), தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (5 நிமிடம் குறையும்), கொல்லம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (85 நிமிடங்கள் குறையும்), நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (45 நிமிடங்கள் குறையும்) ஆகிய ரெயில்களின் வேகம் அதிகரிகப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






