

சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
அன்று முதல் இன்று வரை - திருவண்ணாமலை எப்போதுமே தி.மு.க. மலை!
ஆன்மீகத்தலமான திருவண்ணாமலையில் நின்று திருக்கோவில்களுக்கு நாம் செய்த சாதனைகளையும், மீட்ட கோவில் சொத்துகளையும் புள்ளிவிவரத்தோடு சொல்லியிருக்கிறேன். அதனால்தான் கோவில் நகரமெல்லாம் கழகக் கோட்டையாகத் திகழ்கின்றது.
"தி.மு.க.வின் சாதனைப் பட்டியல் பெரியதா? பழனிசாமியின் துரோகப் பட்டியல் பெரியதா?" என சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமே வைக்கலாம் எனும் அளவுக்குத் தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்தவர் பழனிசாமி.
தங்கள் அடிமை ஆட்சியை மீண்டும் கொண்டுவரத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி, காட்டு தர்பாரைக் கட்டவிழ்த்துள்ளார்கள் பா.ஜ.க. பாதுஷாக்கள்.
இதைவிடப் பெரிய நெருக்கடிகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டுதான் 2021-இல் கழகம் வென்றது, விடியலைத் தந்தது.
அதிகாரிகளை மாற்றினால் மக்களின் முடிவு எப்படி மாறும்? தமிழுக்கும் தமிழர்க்கும் எதிரான டெல்லி அணி எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும், மே-4 திராவிட மாடல் 2.0 அமைவதைத் தடுக்கவே முடியாது!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.