வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

ஆலங்குளம் அருகே வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை மெயின் ரோட்டை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 47). கூலி தொழிலாளி. இவர் தினமும் வீட்டு மாடியில் தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம்போல் மாடியில் தூங்கிய அருணாச்சலம் கழிவறைக்கு செல்வதற்காக மாடியில் இருந்து கீழ இறங்கி வந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அருணாச்சலத்தின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அருணாச்சலத்திற்கு மனைவி மற்றும் 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com