மாற்றுத்திறனாளிக் கலைஞர்களின் 'கற்காலம் முதல் திரைக்காலம் வரை' நாடகம் மேடையேற்றம்

கட்டணமின்றி அனைவருக்கும் இலவச அனுமதியுடன் இந்த நாடகம் அரங்கேறியது.
மாற்றுத்திறனாளிக் கலைஞர்களின் 'கற்காலம் முதல் திரைக்காலம் வரை' நாடகம் மேடையேற்றம்
மாற்றுத்திறனாளிக்- கலைஞர்கள்
Published on: 

சென்னை,

மாற்றுத்திறனாளிக் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய சிறப்பு நாடகமான 'கற்காலம் முதல் திரைக்காலம் வரை' சென்னையில் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்டது.

முக்கிய நிகழ்வு- அமைப்பு

ஆம், நம்மாலும் முடியும் என்ற அறக்கட்டளை சார்பில் 'கற்காலம் முதல் திரைக்காலம் வரை' எனப்படும் நாடகம் உருவாக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. செவித்திறன், பேச்சு மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள் எனப் பல்வேறு மாற்றுத்திறனாளிக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இணைந்து இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

நாடகத்தின் கருப்பொருள் -சிறப்பம்சங்கள்

மனிதகுல வரலாற்றில் 'கற்காலம்' முதல் இன்றைய 'திரைக்காலம்' வரை பொழுதுபோக்கு எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை நகைச்சுவை மற்றும் சமூக விமர்சனத்துடன் இந்த நாடகம் விவரிக்கிறது. அனைத்துத் தரப்பு பார்வையாளர்களும் நாடகத்தை எளிதில் புரிந்துகொண்டு ரசிக்கும் வகையில், மேடையில் சைகை மொழி மொழிபெயர்ப்பு மற்றும் நேரடி ஆடியோ விவரிப்பு போன்ற சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

சென்னை காட்சி விவரங்கள்

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் சின்மயா ஹெரிட்டேஜ் சென்டரின் தபோவன் அரங்கம் அமைந்துள்ளது. இந்த அரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 5:30 மணிக்கு இந்த நாடகத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சி நடைபெற்றது. மேலும் கட்டணமின்றி அனைவருக்கும் இலவச அனுமதியுடன் இது அரங்கேறியது.

தேசிய அளவிலான அங்கீகாரம்

சென்னையில் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நாடகம், அடுத்ததாகப் புது டெல்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளி சார்பில் வரும் பிப்ரவரி 2027-ல் நடத்தப்படும் புகழ்பெற்ற பாரத் ரங் மஹோத்சவ் சர்வதேச நாடக விழாவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

X