வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்

வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளன், போலீஸ் பாதுகாப்புடன் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்
Published on

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தந்தை உடல்நிலை மோசமாக உள்ள காரணத்தால் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன்பொருட்டு அவரை உடன் இருந்து பார்த்துக் கொள்வதற்காகவும் சகோதரியின் மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகவும் தமிழக அரசிடம் பேரறிவாளன் பரோல் கோரியிருந்தார்.

அதை ஏற்று அவருக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று வேலூர் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com