பூட்டை உடைக்க முடியாததால் ஏமாற்றம்: வீட்டின் வெளியே காய வைத்த துணிகளை அள்ளிச் சென்ற திருடன்

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வேலூர்,

பூட்டை உடைக்க முடியாததால் நொந்துபோன திருடன் வீட்டிற்கு வெளியே கொடியில் காய வைத்திருந்த சட்டைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் எதிரில் உள்ள ஆற்றோரம் பகுதியை சேர்ந்தவர் சி.செல்வம் (47 வயது). இவர் நேற்று முன்தினம் சென்னைக்கு சென்றார். இந்த நிலையில் அவரது வீட்டுக்கு திருடன் வந்துள்ளார். வீட்டு கதவில் உள்ள பூட்டை திருடன் உடைக்க முயற்சி செய்துள்ளார். நீண்ட நேரம் போராடியும் பூட்டை உடைக்க முடியவில்லை.

இதனால் நொந்துபோன திருடன் வீட்டிற்கு வெளியே கொடியில் காய வைத்திருந்த சட்டைகளை திருடிவிட்டு சென்றுள்ளார். சென்னையில் இருந்து வீடு திரும்பிய செல்வம் துணிகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக குடியாத்தம் பகுதியில் இது போன்ற சிறு சிறு திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com