படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் விரக்தி: வாலிபர் எடுத்த விபரீத முடிவு

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வாலிபர் விரக்தியில் இருந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கன்னியாகுமரி,

நெல்லை மாவட்டம் கோடாங்கிபட்டி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள எஸ்.எம்.பெருமாள் நகரில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இவருடைய மூத்த மகன் மணிகண்டன் (26 வயது). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் பி.எஸ்சி கேட்டரிங் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்தார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை.

இதனால் விரக்தியில் இருந்த மணிகண்டன் சம்பவத்தன்று வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தொங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மகாலிங்கம் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com