

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளைச் சார்ந்திருப்பதைக்குறைப்பதன் மூலம் பொருளாதார மீட்சிக்கு பங்களிக்குமாறு பிரதமர் மோடி குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார். அவரும் தனது வாகன அணிவகுப்பில் இருந்த வாகனங்களை பாதியாக குறைத்தார்.
இந்த நிலையில், சிக்கன நடவடிக்கையாக சட்டப்பேரவைக்கு மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பைக்கில் வருகை தந்தார். இது குறித்து அவர் பட்னாவிஸ் கூறியதாவது: எரிபொருள் சிக்கனம் குறித்த பிரதமர் மோடியின் அழைப்பு அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இதை செய்கிறோம். எங்களின் கான்வாய் அணிவகுப்பையும் குறைத்துவிட்டோம். அடுத்த 6 மாதங்களுக்கு அரசு எந்த பெரிய நிகழ்ச்சிகளையும் நடத்தாது” என்றார்
இதேபோல, டெல்லி அரசும் சிக்கன நடவடிக்கையை அறிவித்துள்ளது. டெல்லி முதல் - மந்திரி ரேகா குப்தா, மந்திரிகள் மற்றும் பா. ஜனதாவின் அனைத்து சட்ட சபை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், டெல்லி அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்துத் துறையினருக்கும், தேவைக் கேற்ப குறைந்தபட்ச வாகனங்களைப் பயன்படுத்தவும், பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.