எரிபொருள் சிக்கனம்: மின்சார வாகனத்தில் திருமுருகன்பூண்டி விழாவுக்கு சென்ற எல் முருகன்

தனது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை 2 ஆக குறைத்தார் மத்திய இணை மந்திரி எல் முருகன்.
எரிபொருள் சிக்கனம்: மின்சார வாகனத்தில் திருமுருகன்பூண்டி விழாவுக்கு சென்ற எல் முருகன்
Published on

சென்னை,

எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையில், மத்திய இணை மந்திரி எல் முருகன் தனது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை 2 ஆக குறைத்தார் மேலும், அவரது பயண வாகனங்கள் அனைத்தும் மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டன

மத்திய இணை மந்திரி எல். முருகன், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் நடைபெற உள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலை வழியாக பயணம் செய்தபோது, பிரதமரின் அறிவுறுத்தலின்படி தனது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை 2 ஆக குறைத்து கொண்டார். மேலும், அவரது பயண வாகனங்கள் அனைத்தும் மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டன.

உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி விடுத்த சிக்கன நடவடிக்கை அழைப்பை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே மின்சார வாகன பயன்பாடு மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை பாஜக மந்திரிகள் மாநில முதல்-மந்திரிகள் கடைபிடித்து வருகின்றனர் இதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com