எரிபொருள் தட்டுப்பாடு: சென்னை எச்.சி.எல் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணி செய்ய உத்தரவு

முக்கிய பணிகளில் இருப்பவர்கள் மட்டும் அலுவலத்திற்கு வரவேண்டும் என எச்.சி.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு: சென்னை எச்.சி.எல் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணி செய்ய உத்தரவு
Published on

சென்னை,

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதனால், உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய உபயோகத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த சூழலில், இந்தியாவில் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்தது. சில இடங்களில் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், நாட்டின் பல்வேறு நகரங்களில் கடுமையான கியாஸ் சிலிண்டர் விநியோக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஏறக்குறைய ஓட்டல்கள், உணவு விடுதிகளை மூட கூடிய சூழல் காணப்படுகிறது.

இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் சென்னையில் உள்ள எச்.சி.ல். நிறுவனத்தின் கேன்டீன்கள் முடங்கின. இதன் காரணமாக, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என இமெயில் மூலம் எச்.சி.எல். நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், முக்கிய பணிகளில் இருப்பவர்கள் மட்டும் அலுவலத்திற்கு வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com