
பல்வேறு தரப்பினர் நம்பிக்கையுடன் வைத்த கோரிக்கை நிறைவேற்றம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பெண்களுக்கு கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 வழங்கியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. எனவே அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயன் பெறுபவர்களுக்கு இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றி மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து சிறப்பு நிதியாக ரூ.2000 வரவு வைத்துள்ளோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.