

ஊட்டி
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக மக்கள் அவசியம் இன்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா தலங்களும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின.
முழு ஊரடங்கு காரணமாக ஊட்டி நகரம் முழுவதும் வெறுமையாக காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, சேரிங்கிராஸ் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊட்டி சேரிங்கிராஸ் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் போலீசார் தடுப்புகள் வைத்து கண்காணித்தனர். அவசியமின்றி வெளியே இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்தவர்களை சோதனை செய்தனர்.