

சென்னை,
தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோன்று, ஒமைக்ரான் பாதிப்புகளும் உயர்ந்து வருகின்றன. இதனால், இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு ஆகியவை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், வரும் 16ந்தேதி சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யும் மையங்கள் இயங்காது என கூறப்பட்டுள்ளது.