

சென்னை,
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த முகாம்கள், முழு ஊரடங்கு காரணமாக சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 1,600 இடங்களில் இந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. இந்த முகாமில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நடைபெறும் முகாம்களின் இடங்கள் குறித்து https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega-vac-det.jsp என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.