வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விரைவில் முழுமையாக மின் விநியோகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விரைவில் முழுமையாக மின் விநியோகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on

சென்னை,

மழை, வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விரைவில் முழுமையாக மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் விரைந்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்து இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மின் வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானியுடனும், மேற்பார்வை பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டோம்." என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com