‘மெரினா கடற்கரை வழக்கை விசாரித்ததில் முழு திருப்தி’ - வழியனுப்பு விழாவில் நீதிபதி பேச்சு

மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்தது தனக்கு முழு திருப்தியை அளித்ததாக நீதிபதி வினீத் கோத்தாரி தெரிவித்துள்ளார்.
‘மெரினா கடற்கரை வழக்கை விசாரித்ததில் முழு திருப்தி’ - வழியனுப்பு விழாவில் நீதிபதி பேச்சு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் 2-வது மூத்த நீதிபதியாக இருந்தவர் வினீத் கோத்தாரி. தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி ஓய்வுபெற்றதை அடுத்து, நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்தார்.

இந்தநிலையில், அவர் குஜராத் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவருக்கு காணொலி காட்சி வாயிலாக வழியனுப்பு விழா நேற்று நடந்தது. இதில், ஐகோர்ட்டு நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது நீதிபதி வினீத் கோத்தாரியை வாழ்த்தி அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் பேசினார். மூத்த நீதிபதியாக வினீத் கோத்தாரி, 2018-ம் பொறுப்பு ஏற்று 2 ஆண்டுகளில் 8 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார் என்று அவர் கூறினார்.

இதற்கு நன்றி தெரிவித்து பேசிய நீதிபதி வினீத் கோத்தாரி, சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். நான் ஏற்கனவே பணியாற்றிய ராஜஸ்தான், கர்நாடகா ஐகோர்ட்டுகளை ஒப்பிடும்போது சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் திறமையானவர்கள்.

மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்தது தனக்கு முழு திருப்தியை அளித்தது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com