முழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது ; 10 லட்சம் பேர் கைது -மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு மற்றும் துணை நிற்கும் தமிழக அரசை கண்டித்து திமுக போராடி வருகிறது. தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்துள்ளது. #MKStalin #DMK #CauveryIssue #CauveryManagementBoard
முழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது ; 10 லட்சம் பேர் கைது -மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் இன்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் மட்டுமின்றி ரெயில்களை மறித்தும் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அவ்வகையில் சென்னை காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், கி.வீரமணி, திருமாவளவன், ஜவாகிருல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மறியலில் ஈடுபட்டு கைதான, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் புரசைவாக்கத்தில் உள்ள மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் மண்டபத்தில் தங்கவைக்கபட்டு உள்ளனர்.

மண்டபத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசு மற்றும் துணை நிற்கும் தமிழக அரசை கண்டித்து திமுக போராடி வருகிறது. தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்துள்ளது. இன்று மாலை நடைபெறவிருந்த அனைத்துக்கட்சி கூட்டம், நாளை காலை 10.30க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்குபெறும் காவிரி உரிமை மீட்பு பயணம் 7 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில், காவிரி உரிமை மீட்பு பயணம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது . தமிழக ஆளுநருக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லை; அதனால் அவர் தனியே ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறார்.

"ஸ்கீம்" என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு தொடர்ந்த மனுவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.தற்போதைய ஆட்சி மீது ஆளுநர் எந்த அளவுக்கு அபிப்ராயம் வைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே என கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com