கொரோனா தொற்றால் உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு நிவாரண நிதிகுறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சாந்தி வழங்கினார்

கொரோனா தொற்றால் உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு நிவாரண நிதிகுறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சாந்தி வழங்கினார்
Published on

தர்மபுரி:

கொரோனா தொற்றால் உயிரிழந்த பேரூராட்சி தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

குறை தீர்க்கும் கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்வி கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 369 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கலெக்டர் சாந்தி அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ரூ.25 லட்சம் நிவாரண நிதி

கூட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த காரிமங்கலம் பேரூராட்சி தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

இ்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நசீர் இக்பால் (நிலம்), ஜெயக்குமார் (பொது), பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜசேகரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் மற்றும் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com