புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி; டி.ஆர்.பாலு எம்.பி.யின் கடிதத்திற்கு பிரதமர் அலுவலகம் பதில்

முருகேசன் என்பவரது புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் வழங்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி; டி.ஆர்.பாலு எம்.பி.யின் கடிதத்திற்கு பிரதமர் அலுவலகம் பதில்
Published on

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவி வழங்கிடுமாறு பிரதமர் மோடிக்கு கடந்த மார்ச் மாதம் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இந்த கடிதத்திற்கு பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. இதன்படி பிரதமர் அலுவலகம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து முருகேசன் என்பவரது புற்றுநோய் சிகிச்சைக்காக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை, பயனாளர் சிகிச்சை பெறும் சென்னை அடையாறு புற்றுநோய் மையத்திற்கு வழங்கப்படும் என்றும், சிகிச்சை நிறைவடைந்த பின்னர் உரிய ஆவணங்களின் நகலை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அந்த பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com