தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரம் - கணவனை கொலை செய்து உடலை எரித்த மனைவி

தகாத உறவை கண்டித்த கணவனை ஆத்திரத்தில் கொலை செய்து உடலை எரித்த சம்பவத்தில் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரம் - கணவனை கொலை செய்து உடலை எரித்த மனைவி
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் வனத்துறைக்கு சொந்தமான கல்லங்காடு முந்திரி காட்டில், எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத சடலத்தை கடந்த 30ஆம் தேதி போலீசார் கண்டறிந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில், வேல்முருகன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், உயிரிழந்த நபர் வடகடல் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பதும், அவரது மனைவி அனுப்பிரியா என்பவருடன் உறவினரான வேல்முருகன் தகாத உறவில் இருந்து வந்ததும் தெரியவந்தது. தகாத உறவை அறிந்த சுரேஷ் மனைவியை கண்டிக்கவே, ஆத்திரமடைந்த அனுப்பிரியா, கள்ளக்காதலன் வேல்முருகனுடன் சேர்ந்து வீட்டில் சுரேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

பின்னர் உடலை சாக்கு பையில் மூட்டை கட்டி, வெண்மான் கொண்டான் முந்திரி காட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியது விசாரணையில் அம்பலமானது. அதனைத் தொடர்ந்து, வேல்முருகன் மற்றும் அனுப்பிரியாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com