சென்னையில் 'ஜி20' மாநாடு கருத்தரங்கம்: வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் பகுதிகளில் 'டிரோன்' பறக்க தடை

சென்னையில் ‘ஜி20’ மாநாடு கருத்தரங்கில் பங்குபெற உள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் பகுதிகளில் ‘டிரோன்’ பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
சென்னையில் 'ஜி20' மாநாடு கருத்தரங்கம்: வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் பகுதிகளில் 'டிரோன்' பறக்க தடை
Published on

இந்தியாவில் 'ஜி20' மாநாடு வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் சென்னை 2-வது கட்ட கருத்தரங்கு நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுதினம் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி.கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ளது.

இதில் 29 வெளிநாடுகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இவர்கள் கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல், ரமடா பிளாசா, ஓட்டல் ஹப்ளீஸ், ஓட்டல் பார்க் ஹையாத் ஆகிய ஓட்டல்களில் தங்குகின்றனர்.

எனவே 25-ந் தேதி வரையில் இவர்கள் தங்கி உள்ள ஓட்டல்கள், கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல் மற்றும் இவர்கள் செல்லும் வழித்தடங்களை சிவப்பு மண்டலமாக சென்னை போலீசார் அறிவித்துள்ளனர். இந்த பகுதிகளில் டிரோன்கள், இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com