'ககன்யான்' திட்ட ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி

எஸ்.எம்.எஸ்.டி.எம். என்ற மாடலிங் என்ஜினின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பணகுடி,

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளுக்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின், பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகள் விண்வெளிக்கு சென்று விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக, எஸ்.எம்.எஸ்.டி.எம். என்ற மாடலிங் என்ஜினின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

அதன்படி நான்காவது கட்டமாக 130 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு, சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. இதனை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார். இஸ்ரோ தலைவர் நாராயணன், திருவனந்தபுரம் திரவமைய இயக்குனர் மோகன் ஆகியோர் காணொலிக்காட்சி மூலமாக பார்வையிட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com