வடமதுரை அருகே அய்யப்ப பக்தர்களுக்கு பஜனை போட்டி

வடமதுரை அருகே அய்யப்ப பக்தர்களுக்கு பஜனை போட்டி நடைபெற்றது.
வடமதுரை அருகே அய்யப்ப பக்தர்களுக்கு பஜனை போட்டி
Published on

வடமதுரை அருகே உள்ள வாலிசெட்டிபட்டியில் ஸ்ரீசபரி யாத்திரை குழுவின் சார்பில் "ஒன்று கூடுவோம், அய்யப்பன் புகழ் பாடுவோம்" என்ற தலைப்பில் பஜனை சங்கம போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கு திண்டுக்கல் துர்க்கை அம்மன் கோவில் செயலாளர் பாஸ்கரன், வடமதுரை மணிமண்டப மகரஜோதி குழு தலைவர் காமராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், வடமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 8 அய்யப்ப பக்தர்கள் பஜனை குழுவினர் கலந்துகொண்டு பஜனைகளை பாடி அசத்தினர்.

இந்த பஜனை போட்டிக்கு திண்டுக்கல் தேவஜாலிஸ், வத்தலக்குண்டு முத்துக்குமரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். அப்போது சிறப்பாக பாடிய 3 பஜனை குழுவினரை தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு முதல் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயமும், 2-ம் பரிசாக அரை கிராம் தங்க நாணயமும், 3-ம் பரிசாக 20 கிராம் வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அய்யப்ப பக்தர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com