காந்தி ஜெயந்தி: திருநெல்வேலியில் நாளை மது விற்பனைக்கு தடை- கலெக்டர் உத்தரவு


காந்தி ஜெயந்தி: திருநெல்வேலியில் நாளை மது விற்பனைக்கு தடை- கலெக்டர் உத்தரவு
x

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள், மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்படும்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (2.10.2025, வியாழக்கிழமை) திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் (FL1 உரிமங்கள்) அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA & FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 2.10.2025, வியாழக்கிழமை அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story