காந்தி நினைவு தினம் கடைபிடிப்பு

காந்தி நினைவு தினம் கடைபிடிப்பு
Published on

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

காந்தி நினைவு தினம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கி காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கலந்து கொண்டவர்கள் தீண்டாமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பாப்பிரெட்டிபட்டி முருகன் கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு பாரதமாதா அறக்கட்டளை தலைவர் ராஜாராம், கோவில் தர்மகர்த்தா கார்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாப்பிரெட்டிபட்டி பஸ் நிலையத்தில் வட்ட குழு சமூக நல்லிணக்க மேடை சார்பில் ஒருங்கிணைப்பாளர் அம்புரோஸ் தலைமையில் மகாத்மா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அரசு கல்லூரி

பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. செயல் அலுவலர் கோமதி தலைமை தாங்கினார். எழுத்தர் லதா, சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காந்திஉருவப்படத்துக்கு செயல் அலுவலர் கோமதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாலக்கேடு அரசு கலை அறிவியல் கல்லூரியில் காந்தி நினைவு நாளையொட்டி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் செண்பகவள்ளி, பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் மத ஒற்றுமையை வலியுறுத்தி பாடல்கள் பாடப்பட்டன. ஏற்பாடுகளை 3-ம் ஆண்டு மாணவர்கள் நந்தகுமார், பத்மாவதி ஆகியோர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com