

இதற்காக அங்குள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஏராளமான அளவில் வந்திருந்தனர்.
காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பழனிவேல் தியாகராஜன், சேகர்பாபு, நாசர், தலைமைச் செயலாளர் இறையன்பு வந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த தனி மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார். அதை அங்கிருந்த அனைவரும் திரும்ப கூறினர்.
தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ, சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.