விநாயகர் சதுர்த்தி; சென்னையில் ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு


விநாயகர் சதுர்த்தி; சென்னையில் ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு
x

சென்னையில் 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 27-ந்தேதி(புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் தேசிய விடுமுறை நாள் என்பதால், சென்னையில் 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் புறநகர் ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story