விருதுநகரில் ரூ.2 கோடி மதிப்பிலான விநாயகர் மற்றும் மாணிக்கவாசகர் சிலைகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் ரூ.2 கோடி மதிப்புள்ள விநாயகர், மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் ரூ.2 கோடி மதிப்பிலான விநாயகர் மற்றும் மாணிக்கவாசகர் சிலைகள் பறிமுதல்
Published on

விருதுநகர்,

விருதுநகரைச் சேர்ந்த பாலமுருகள் என்பவர் பழமையான சிலைகளை விற்க முயற்சி செய்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சிலை வாங்கும் நபர்களை போல, டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையிலான குழு பாலமுருகனை அணுகியது.

பாலமுருகனின் கூட்டாளியிடம் வேறு ஒரு சிலை வாங்குவதாகக் கூறி போலீஸ் அவரை சென்னை அழைத்து வந்தது. பாலமுருகள் அவரது நண்பர்களான பிரபாகரன், மணிகண்டனை அறிமுகம் செய்து வைத்த நிலையில் அவர்களிடம் இருந்து விநாயகர் சிலையை வாங்கினர்.

சிலையை வாங்கியவுடன் டி.எஸ்.பி. முத்துராஜா, தனிப்படை காவலர்களுடன் வந்து குற்றவாளிகளை சுற்றி வளைத்து மூன்று பேரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com