இயற்கை பொருட்கள் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க வேண்டும்: ஜக்கி வாசுதேவ்

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இயற்கை பொருட்கள் மூலம் விநாயகர் சிலைகளை தயாரிக்க வேண்டும்: ஜக்கி வாசுதேவ்
Published on

இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகையின்போது, நாம் வணங்கும் விநாயகர் சிலைகளை மண், சிறுதானியம், மஞ்சள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும்.பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தயாரித்தால் அதை நீரில் கரைக்க முடியாது. பானைகள் செய்வதை போல் சுடுமண்ணில் தயாரித்தாலும் அதை கரைக்க முடியாது. மேலும், சிலையின் மீது செயற்கை வர்ணங்களை பூசினால் அது நீரை மாசுப்படுத்தும். ஆகவே, நீரில் கரையும் தன்மை கொண்ட இயற்கை மூலப்பொருட்களை கொண்டு மட்டுமே விநாயகர் சிலையை தயாரித்து இந்த விழாவை கொண்டாட வேண்டும். ஒரு கடவுளை உருவாக்கி, அதை நீரில் கரைக்கும் சுதந்திரத்தை விநாயகர் சதுர்த்தி பண்டிகை நமக்கு வழங்குகிறது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும். நம் கலாசாரத்தை பாதுகாப்பதற்கும், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கும் இதுவே சிறந்தவழி.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com