திருவண்ணாமலையில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்

8 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் மனதை பதைபதைக்கச் செய்கிறது.
திருவண்ணாமலையில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்
Published on

சென்னை,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருவண்ணாமலைக்கு வந்திருந்த 15 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் மனதை பதைபதைக்கச் செய்கிறது.

புண்ணிய பூமியான திருவண்ணாமலையில் தரிசனம் செய்ய வந்த இளம்பெண்ணை அவரது தாய் முன்பே இருகாவலர்கள் வன்கொடுமை செய்த ரணம் மனதை விட்டு ஆறும் முன்பே, மற்றொரு கொடூரம் அரங்கேறி இருப்பது திறனற்ற திமுக ஆட்சியால் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பில்லை என்பது மிகத் தெளிவாகிறது. பெண்கள் பாதுகாப்பை பறிக்கும் சமூக விரோதிகளை வளர்த்துவிட்ட திமுக ஆட்சிக்கு நாளை மறுநாள் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவர்! தேசிய ஜனநாயக கூட்டணியைத் தேர்ந்தெடுத்து தமிழகத்தை மீட்டெடுத்து காப்பர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com